அரிமா வரிவை மகிழ்ந்தே யருளக்
கரிமா லிராவணனைக் கொன்றான் - செருமா
களத்திற் சரமாய்க் கலந்து நவநா
டுளைத்துப் பிளந்தா ளுடல்
சீர் பிரித்து
அரிமா அரிவை மகிழ்ந்தே அருளக்
கரி மால் இராவணணைக் கொன்றான் - செரு
மாகளத்தில் சரமாய்க் கலந்து நவ நாள்
துளைத்துப் பிளந்தாள் உடல்
அரிமா - சிங்கம் அதை வாகனமாகக் கொண்ட அரிவை - துர்க்கை நவ நாள் - நவமி
இராமருக்கு இராவணனைப் போரில் வெல்ல அருள் புரிந்தால் துர்க்காம்பிகை , போர்களத்தில் நவமி அன்று இராமரின் அம்பாக ஊடுருவி அரக்கன் இராவணனை செற்றனள் அவனது உடலைத் துளைத்துப் பிளந்து
The Goddess who has lion as her mount was pleased and graced Sri Rama to kill Ravana. In the battlefield on the Navami day she entered as Sri Rama's arrows and tore down Ravana's body
#அம்பாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக