குவலயத்து மறையமர்ந்த திருபுரத்து வாசினி
யவமகற்றி யருளளிக்கு முடிவிலாத மோகினி
தவமியற்று சிவலயற்கு நயந்தருளு காமினி
உவமையற்று மொழிதவிக்கு நிகிரிலாத நீபையே
#அம்பாள்
குவலயத்து மறை அமர்ந்த திருபுரத்து வாசினி
அவம் அகற்றி அருள் அளிக்கும் முடிவு இ(ல்)லாத மோஹினி
தவம் இயற்று சிவ லயற்கு நயந்து அருளு காமினி
உவமை அற்று மொழி தவிக்கும் நிகர் இ(ல்)லாத நீபையே!
இவ்வுலகில் மறைவாக உள்ள ஸ்ரீபுரமாக அமைந்திருக்கின்ற மதுரை நகர் வாசினி!
அனைவருக்கும் அவம் என்பதை அகற்றி அருள் அளிப்பதில் மோகம் கொண்டுள்ள முடிவொன்றில்லாதவளே
சிவத்தில் லயிக்கத் தவம் இயற்றுவோர்க்கு நயந்து தத்தமது விருப்பங்களை அருளும் காம ஸ்வரூபிணியே
உன்னை ஏத்த உவமைகள் இல்லாது மொழியானது தவிக்கும் படி விளங்குகின்ற ஒப்பற்ற கடம்ப வனம் வீற்றிருப்பவளே!
You reside in the hidden Sripura on this earth (Madurai), you remove the sufferings of everyone through your grace oh enchantress who is without an end, for those who set their mind on contemplating on the nirguna form, you enthusiastically grant their desires too, oh mother who is of the form of desires, language struggles in its effort to describe you oh peerless mother who resides in Kadamba forest (Madurai)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக