இயக்க மிருத்த லிருவேறா
விணக்கம் வெறுத்த லிருவேறா
தயக்கந் துணித லிருவேறா
தனைக்கண் டறித றகராறா
மயக்க மலர்த லிருகூறா
மனக்கண் டிறத்த றரும்வீடா
முயங்குஞ் சிவ்த்தை யறிவீரா
முனைப்பி னரிவை சதிதேகா
இயக்கம் இருத்தல் இருவேறா
இணக்கம் வெறுத்தல் இருவேறா
தயக்கம் துணிதல் இருவேறா
தனைக் கண்டறிதல் தகராறா
மயக்கம் மலர்தல் இரு கூறா
மனக் கண் திறத்தல் தரும் வீடா
முயங்கும் சிவத்தை அறிவீரா
முனைப்பின் அரிவை சதி தேகா
இயக்கமாகிய சக்தியும் இருத்தலாகிய சிவமும் இரு வேறா ? தயக்கமும் துணிவும் இருவேறா ? தன்னைக் கண்டு அறிதல் தான் இதைத் தகர்க்கும் வழியா மயக்கமும் ஞான மலர்தலும் இரு கூறுகளா , அகக் கண்ணைத் திறத்தல் வீடு பேற்றைத் தருமா ; சிவமே என்றும் சக்தியுடன் முயங்கிக் கிடக்கும் என்பதை அறிவீரா , முனைப்பின் அரிவையான சதியைத் தேகத்தில் கொண்டவனன்றோ சிவன்!
Are the kinetic and potential, love and hate, vacillation and decisiveness, knowledge and ignorance two different things, is understanding oneself and opening up of inner intuition a solution to everything? Dont you know that static principle Siva and dynamic principle Sakti are in constant cosmic embrace?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக