வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

மாதூதா மாலை மாற்று (ஆஞ்சநேயருக்கும் பெருமாளுக்கும் சிலேடையாக)

மாதூதாவா னாதாதீதே காராமாதா சாவாகாவா

வாகாவாசா தாமாராகா தேதீதானா வாதாதூமா 

#மாலைமாற்று

 1.

 சீர் பிரித்து

மா தூதா வால் நாதா தீது ஏகா ராமா தாசா ஆகா ஆ

வாகா ஆசு ஆதா மாரா கா தேதி தானா வா தா தூ மா 

 

பொருள்:-

மா தூதா - சீதையைக் காண தூதுவனாய்ச் சென்றவனே

வால் நாதா - வாலை உடைய வானரத் தலைவனே

தீது ஏகா ராமா தாசா - தீயது சற்றும் ஒட்டாதபடி உள்ள தூய ராம தாசனாய் விளங்கியவனே 

வாகா - குணசீலனே

ஆசு ஆதா - விரைவாக விளங்கும் குருவே

மாரா - காமனைப் போல அதீத அழகு உடையவனே - சுந்தரனே!

ஆகா ஆ - தன் முயற்சியால் ஒன்றும் ஆகாத உயிர்களுக்கு

தானா வா - தானாக வந்து 

தேதி கா - இறுதித் தேதியில் வந்து காப்பாயாக

தா தூ மா - அத்துடன் தூய்மையான மற்றும் மாபெரும் இலக்கை (வீடு பேற்றை) எமக்குத் தருவாயாக 

 

Oh Messenger who went to find Seetha, great Vanara , one who does not have anything remotely close to evil touching him, great serving devotee of Rama, strong one, one who is swift and a Guru, one who is handsome like Manmatha, for the souls who have no good coming out of their effort, please come at the assigned final date and save them and also grant the purest and highest ideal of salvation! 


Anjaneya


2.

இவ்வாறாகச் சீரைப் பிரித்து :-

மாது ஊதா, வான் நாதா, தீ தேகா, ராமா, தாசா, வாகா, ஆவாகா, வாசா தாமா. ராகா, தேது ஈதான் ஆ, வா, தா, தூ மா 

பொருள்:-

அழகான நீல நிறத்தவனே , வானில் உலாவும் நித்ய சூரிகளின் நாதனே , தீயின் வடவினான தேகா - (உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -திருப்பாவை) ராமனே , பத்துப் பெரும் அவதராங்கள் கொண்டவனே, வலிமையும் அழகும் மிக உடையவனே , வேள்விகளில் தரும் ஆவாஹனத்திற்கு இலக்கானவனே , பரமபதத்தில் வசிப்பவனே, ஆசை என்னும் சொல்லுக்கே இலக்கணமாய் விளங்குபவனே, உயிர்களுக்கு தேசு ஈதவனே (உள்ளொளியாய் விளங்குபவனே) நீ வந்து எமக்கு உமது தூய பதத்தை வழங்க விண்ணப்பிக்கிறோம் 

Oh One with a beautiful dark hued form, Lord of Nitya Suris, one who has the body/form as fire (tatva), Rama! one who takes ten major incarnations, one with limitless beauty and strength, one whom all the merits of Vedic sacrifices reach, one who stays/rules Vaikunta, one who stands as the definition of the word desire, one who as Antaryami shines as the inner light of all souls(Atmas), please come and grant us the salvation to serve you in  your peerless abode

படம்

 

#பெருமாள் #ஆஞ்சநேயர் #palindrome 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்