வியாழன், 6 பிப்ரவரி, 2025

யாகாயாழீ

 



திருஞான சம்பந்தரின் இம்மாலைமாற்றுப் பாடலிற்குச் சாக்த பரமாக ஒரு பொருள் காணலாம்

யாகா - யாக வடிவானவளே 

யாழீ - சரசுவதி காயா - உரு எடுப்பவளே , 

கா தா யார் ஆ - அக்களை காப்பதும் அழிப்பதும் யார் என்று முடிவெடுப்பவளே, 

ராதா - ராதையாக வருபவளே , 

யாயாய் - எமது தாயாக , 

ஆ யா -உயிர்களின் தளையை (விடுவிக்கும்) 

தாரா - தாரா எனும் தேவியே, 

ராயா தா - பெரும் அரசர் தேவர் இவர்களும் சக்தி தருபவளே , 

காயா - காயாம்பூ நிறத்தவளே , 

காழ் ஈயா கா யா -குற்றம் சேராதவாறு உயிர்களைக் காப்பாயாக

திருஞானசம்பந்தர் 

 

காழிப் பிள்ளையாரின் பாடலை சாக்த பரமாக சிந்தித்த போது! இது குருமார்களின் கருத்தல்ல எளியேனின் சொந்த கருத்து , குறிப்பாக தமிழ் மொழியின் ஆழத்தைக் காட்டுவதாக எடுத்துக் கொள்க

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்