செவ்வாய், 4 மார்ச், 2025

செங்காந்தட் சிறுபாலன்

செங்காந்தட் சிறுபாலன் சிவவடிவி னுதித்தவனாந் தின்றாலு மோயாத தீர்பசியின் வயிறுடையா னங்காள வீஸ்வரியி னழகிடையி லணியமர்ந்தா னைந்தழகு கரமுடையா னையையுமை யுருவுடைத்தான் சிங்கார மடந்தையுடன் சிவநடத்து லீலைகளே சிருட்டியின் வித்தாகுந் தத்துவ மென்றுணர வெங்கெங்கு காணினும் விளங்கு மிருத்தலு மாற்றலு மிணைபிரியா வொன்றே

 

 செங்காந்தள் சிறு பாலன் சிவ வடிவின் உதித்தவனாம்

தின்றாலும் ஓயாத தீர் பசியின் வயிறுடையான்

அங்காள ஈஸ்வரியின் அழகு இடையில் அணி அமர்ந்தான்

ஐந்து அழகு கரம் உடையான் ஐயை உமை உரு உடைத்தான்

சிங்கார மடந்தையுடன் சிவம் நடத்து லீலைகளே

சிருஷ்டியின் வித்து ஆகும் தத்துவம் என்று உணர

எங்கு எங்கு காணினும் விளங்கும்

இருத்தலும் ஆற்றலும் இணை பிரியா ஒன்றே

 

The boy who is of a reddish countenance (Murugan) is Shiva's  form and emanated from him, (Ganesha)the person is ever hungry, how much ever he eats and who sits nicely on Shakti's beautiful waist, who has 5 hands is of Shakti's form. The interplay of Shiva and Shakti is the Leela that the universe is made of and all creation is seeded by this, once we understand this, we also see that everywhere Dynamic and Static principles or Energy and Matter are always united as one!

 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி