புதன், 5 மார்ச், 2025

மால்வரை ஆசிரியப்பா

 மால்வரை மகளின் மகனி னுயர்வை
யார்வரை யறுக்கக் கூடுங் கரிமுக
சத்தியினு யர்வைத் தத்துவ முடிபைப்
பத்திரப் படுத்தப் பாது காக்க
நித்திய வாழ்வின் குறைக ளண்டா
நிஜத்தை நீர்க்கச் செய்யா
துயிரென வோம்பு மொருபல் லோனே



மால் வரை மகளின் மகனின் உயர்வை யார் வரை அறுக்கக் கூடும் ? கரிமுக! சத்தியின் உயர்வைத் தத்துவ முடிபைப் பத்திரப் படுத்தப் பாதுகாக்க , நித்திய வாழ்வின் குறைகள் அண்டா, நிசத்தை நீர்க்கச் செய்யாது உயிர் என ஓம்பும் ஒரு பல்லோனே

கணபதி சக்தி தத்துவக் காவலன்

பெருமைக்குரிய இமய மலை (இமவானின்) மகளான பார்வதியின் மகனின் உயர்வை யார் வரையறுக்கக் கூடும்? கரிமுக! சத்தியின் தத்துவத்தை பாதுகாத்துக் காக்கவும், அது தினசரி நிகழ்வின் குறைகள் அண்டாதிருக்கவும் , உண்மை நீர்த்துப் போகாதிருக்கவம் உயிராகப் போற்றும் ஒற்றைத் தந்தன் அன்றோ நீ!

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி