ஆழியான் பாலது அன்புளங் கொண்டதால் மாயமா யாகினாயோ
ஆணிவே ரானநீ ஆலிலை பாலகன் ஆணையால் தூங்கினாயோ
ஊழிசேர் ஊழினை உற்றவன் என்பதால் உன்னளி மூடினாயோ
ஓகமோ யாகமோ ஒன்றுமே அறிகிலேன் என்பதால் வாடினாயோ
பாழிலே வாழ்வெலாம் பண்டுநாள் விற்றதால் பாவிமேல் கோவந்தானோ
பங்கயப் பாவையைப் பாடியே என்குறை இன்றுநான் தீர்க்கலாமோ
ஆழிசூழ் பூவிலே ஆவுறுந் துன்பினை யன்னையே பொறுக்கலாமோ
ஆறுமா றாகநீ அன்புளங் கொண்டுவா நேரிலா ஸ்ரீதேவியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக