1.பதிசேவை புரிபாவை விதிசேத மண்டாது
மதிசூடு மாதேவன் கதிசேருங் காமாட்சி
2.காமாட்சி பெயர்சொல்லி நாமாட்சி நாம்பெறுவோ
மேமாற்ற நமக்கில்லை சீமாட்டி சிரிப்புளதே
3.உளமெங்கு மூற்றெடுக்கும் வளமான சொற்களினால்
விலையுயர்ந்த மாலையது பலகாலம் புனைவோமே
4.புனைவேடம் பலவுடையா ணினைவெல்லா நகைத்திடுவா
டனைவேண்ட வருடந்தாண் முனைவேது மில்லாமல்
5.இல்லாத நிலையென்று மில்லாம லாக்கிடுவாள்
கல்லாலி னிழலமரு மில்லாளின் கருணையிது
6.இதுகாறுங் காணாத மதிஞான மளித்திடுவாள்
கதிசேரக் காமாட்சி துதிபாட விழைவோமே
7.விழைவேது வேண்டிலமே விழைவாக நீவருவாய்
மழைவேண்டி மரங்ளலெல்லா மழைவேதுந் தருவதில்லை
8.தில்லைக்கு மேலான வெல்லையிருங் காமாட்சி
வில்லேந்தும் புருவத்தாள் புல்லாக்குஞ் செப்புமதோ
9.அதோமுகக் கருணைத்தே இதோவென வீன்றிவளாம்
சதாசிவ நாயகனுஞ் சதாவிவள் சேவையிலே
10.சேவையிலே கரைகண்டு தேவையெல்லா மிவளாக்கி
யாவியிவட் கர்ப்பணிக்க மேவிடுவோங் கச்சிபதி
சீர் பிரித்து
1.பதி சேவை புரி பாவை விதி சேதம் அண்டாது
மதி சூடும் மா தேவன் கதிசேரும் காமாட்சி
2. காமாட்சி பெயர்சொல்லி நா மாட்சி நாம் பெறுவோம்
ஏமாற்றம் நமக்கில்லை சீமாட்டி சிரிப்பு உளதே
3. உ(ள்)ளம் எங்கும் ஊற்று எடுக்கும் வளமான சொற்களினால்
விலை உயர்ந்த மாலை அது பல காலம் புனைவோமே
4. புனை வேடம் பல உடையாள் நினைவு எல்லாம் நகைத்திடுவாள்
தனை வேண்ட அருள் தந்தாள் முனைவு ஏதும் இல்லாமல்
5 இல்லாத நிலை என்று இல்லாமல் ஆக்கிடுவாள்
கல் ஆலின் நிழல் அமரும் இல்லாளின் கருணை இது
6. இது காறும் காணாத மதி ஞானம் அளித்திடுவாள்
கதி சேரக் காமாட்சி துதி பாட விழைவோமே
7. விழைவு ஏதும் வேண்டிலமே விழைவாக நீ வருவாய்
மழை வேண்டி மரங்கள் எல்லாம் அழைவு ஏதும் தருவது இல்லை
8. தில்லைக்கும் மேலான எல்லை இரும் காமாட்சி
வில் ஏந்தும் புருவத்தாள் புல்லாக்கும் செப்பும் அதோ
9. அதோ முகக் கருணைத் தே இதோ என ஈன்றவளாம்
சதாசிவ நாயகனும் சதா இவள் சேவையிலே
10. சேவையிலே கரை கண்டு தேவை எல்லாம் இவள் ஆக்கி
ஆவி இவள்கு அர்ப்பணிக்க மேவிடுவோம் கச்சி பதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக