சத்திபாணி சாத்திநின்ற சாந்தமான கோலமோ
முத்திபாணி வாய்த்தளிக்கு முறுவலேந்து கோலமோ
யத்திநாதன் மணமுடித்த கெட்டிமேளக் கோலமோ
சித்தனாகத் தண்டமேந்து சித்தமாளு கோலமோ
மொத்ததேவர் போற்றிநின்ற வெற்றிமூளு கோலமோ
வித்தையாளு மௌநாதர் கேட்டுவந்த கோலமோ
பத்தியாலுன் புகுழுரைப்ப நீரசித்த கோலமோ
புத்திகூர்மை மீதளிப்ப ப்ரம்மசாரி கோலமோ
சித்தசுத்த மோங்கிவார்க்கு மக்னிஜாத கோலமோ
தத்துவத்தை வலியுறுத்து மயிலமர்ந்த கோலமோ
கத்திபோல மலமகற்றுங் க்ரௌஞ்சதாரி கோலமோ
சத்தமின்றி யொளிந்துநிற்குங் குகனதான கோலமோ
தொத்தநின்ற வினையகற்றுங் கங்கைமந்த கோலமோ
சத்துசித்து மகிழ்வுமொன்றுஞ் சோமஸ்கந்த கோலமோ
கொத்துவேட குலவிளக்கு வள்ளிநாத கோலமோ
வித்தகாவுன் வாஞ்சைசொல்ல சத்தியங்க ளேங்குமே
சீர் பிரித்து:-
சக்தி பாணி சாத்தி நின்ற சாந்தமான கோலமோ
முத்தி பாணி வாய்த்து அளிக்கும் முறுவல் ஏந்து கோலமோ
அத்தி நாதன் மணம் முடித்த கெட்டி மேளக் கோலமோ
சித்தனாக தண்டம் ஏந்தும் சித்தம் ஆளும் கோலமோ
மொத்த தேவர் போற்றி நின்ற வெற்றி மூளு கோலமோ
வித்தை ஆளும் மௌனநாதர் கேட்டு உவந்த கோலமோ
பத்தியால் உன் புகழ் உரைப்ப நீ ரசித்த கோலமோ
புத்தி கூர்மை மீதளிப்ப ப்ரம்மசாரி கோலமோ
சித்த சுத்தம் ஓங்கி வார்க்கும் அக்கினி ஜாதன் கோலமோ
தத்துவத்தை வலியுறுத்தும் மயில் அமர்ந்த கோலமோ
கத்தி போல மலம் அறுக்கும் க்ரௌஞ்சதாரி கோலமோ
சத்தம் இன்றி ஒளிந்து இருக்கும் குகன் அதான கோலமோ
தொத்த நின்ற வினை அகற்றும் கங்கை மைந்த கோலமோ
சத்து சித்து மகிழ்வும் ஒன்றும் சோமஸ்கந்த கோலமோ
கொத்து வேட குல விளக்கு வள்ளி நாதன் கோலமோ
வித்தகா உன் வாஞ்சை சொல்ல சத்தியங்கள் ஏங்குமே
பொருள்:-
வேலைக் கையில் ஏந்தும் சாந்தமான கோலமா, முத்தி அளிக்க வல்ல சிரித்திருக்கும் கோலமா, தேவானையின் நாதனான் திருமணக் கோலமா, சித்தன் தண்டாயுதபாணியாக நிற்கும் சித்தத்தை மயக்கும் கோலமா, அசுரர்களை நீ அழித்த நின்ற போது அனைத்துத் தேவரும் சேர்ந்து நின்ற வாழ்த்திய திருக்கோலமா, மௌன நாதரான தக்ஷ்னாமூர்த்தி பிரணவ மந்திரத்தின் கேட்டுவந்த சுவாமி நாத கோலமோ, மிகுந்த பத்தியால் திருப்புகழை அருணகிரிநாதர் உரைத்த போது வந்து நீ இரசித்த கோலமா, புத்தி கூர்மை மிக அளிக்க வல்ல உன் ப்ரம்மச்சாரி கோலமா, பக்தர்கட்குச் சித்த சுத்தம் மிக அளிக்கும் அக்கினி ஜாதன் கோலமா, தத்துவத்தை வலியுறுத்தும் மயில் அமர்ந்த கோலமா (சிகி வாஹனர்), கத்தியைப் போல மலங்களை அறுக்கும் க்ரௌஞதாரி (க்ரௌஞ்ச மலையைத் தகர்த்த கோலம்), சத்தம் இன்றி ஒளிந்து இருக்கும்(இதைய குகைக்குள்) 'குகன்' என்னும் கோலமா, ஆக்களை தொத்த நின்ற வினை அறுக்கும் கங்கை மைந்தன் கோலமா, சத்சித் ஆனந்த கோலமாக இருக்கும் சோமாஸ்கந்த மூர்த்தியா, விலங்குகளைக் கொத்தும் வேடர் குல விளக்கான வள்ளியின் நாதனாக இருக்கும் வள்ளி கல்யாண சுந்தரர் கோலமா, இப்படி எண்ணற்ற கோலங்களில் நீ வீற்றிருக்க, வேதங்களும் உன் வாஞ்சையை விவரிக்க ஏங்கி நிற்கும் அன்றோ!
Holding the Vel in your hands calmly as Shakti Pani, granting salvation with a smile, the form of marrying Devasena, holding the stick as Dandayudapani majestically, the entire Devas retinue standing and praising you after your victory, teaching Pranava to Lord Shiva as Swami Natha, enjoying the Thiruppugazh composed by ArunaGiriNathar, giving intellectual prowess to devotees in your Brahmachari form, giving purity of mind as Agni Jatha form, removing all impurities as KrounchaDhari form, silently remaining hidden in devotees hearts as Guha, absolving the devotees of their Karmic issues as Gangai Maindha, Satchidananda swaroopa as Somaskanda Moorthi, VaLLi Kalyana Sundarar form, you have these various forms and the Vedas keep longing to sing your praises in various forms!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக