தாயுள்ளம் பெருங்கருணை தேடிவரந் தந்திடுவான்
றாகமென வொருபோதும் போகவிடான் கண்டாயோ
சேயுள்ள மரும்பெருமை நாடிந்து மகிழ்விப்பான்
றீந்தமிழை யினிப்பெனவே தித்திக்க நமக்களிப்பான்
காயுள்ளங் கொடும்பகைவர் கணப்பொழுதில் வென்றிடுவான்
கருணைமிகுங் கடலிவனால் கொல்லாம லாட்கொள்வா
னீயுள்ள மளவில்லை யீன்றவளை யொத்தவனா
மிவன்சாயன் மொத்தமுமுன் பிரதிபிம்ப முமையம்மே
தாய் உள்ளம் பெரும் கருணை தேடி வரம் தந்திடுவான்
தாகம் என ஒரு போதும் போக விடான் கண்டாயோ
சேய் உள்ளம் அரும் பெருமை நாடி வந்து மகிழ்விப்பான்
தீந்தமிழை இனிப்பெனவே தித்திக்க நமக்கு அளிப்பான்
காய் உள்ளம் கொடும் பகைவர் கணப் பொழுதில் வென்றிடுவான்
கருணை மிகும் கடல் இவனால் கொல்லாமல் ஆட்கொள்வான்
ஈ உள்ளம் அளவு இல்லை ஈன்றவளை ஒத்தவனாம்
இவன் சாயல் மொத்தமும் உன் பிரதிபிம்பம் உமை அம்மே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக