ஆற்றல் வடிவின ளழகி னழகே
யான்ம வுயர்வினை யருளு மமுதே
போற்றல் வடிவினள் புதிதின் புதிதே
போக்காய்த் துணைவரும் புருவத் தொளியே
கூற்றின் வடிவினள் கடைவா யடக்குங்
குறையா வெளிபடர் கருமைக் கடலே
மாற்றல் வடிவினள் மனவிற் கரளே
மாறா நிலைபெறும் புவனேஸ் வரியே
சீர் பிரித்து
ஆற்றல் வடிவினள் அழகின் அழகே
ஆன்ம உயர்வை அருளும் அமுதே
போற்றல் வடிவினள் புதிதின் புதிதே
போக்காய்த் துணை வரும் புருவத்து ஒளியே
கூற்றின் வடிவினள் கடை வாய் அடக்கும்
குறையா வெளிபடர் கருமைக் கடலே
மாற்றல் வடிவினள் மன வில் கரளே
மாறா நிலை பெறூம் புவனேஸ்வரியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக