சத்தியான சிவமுமான சத்தியத்தை நாடிடச்
சித்தியென்ன வித்தையென்ன தேர்ந்ததேடல் வேண்டுமோ
முத்தியென்ற யுத்திகாண மூலமான வன்னையைக்
கத்தியாளுங் குழந்தைபோன்ற கூவலொன்று போதுமே
சத்தி ஆன சிவமும் ஆன சத்தியத்தை நாடிடச்
சித்தி என்ன வித்தை என்ன தேர்ந்த தேடல் வேண்டுமோ
முத்தி என்ற உத்தி காண மூலமான அன்னையைக்
கத்தி ஆளும் குழந்தை போன்ற கூவல் ஒன்று போதுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக