மண்கடந்த விண்கடந்த மாமாயை யென்றாலென்
றண்கடம்ப கான்வசிப்பா டாயன்றோ - கண்கலங்கிச்
சேவிக்குஞ் சேய்க்குத் திருவரு டேர்ந்தருளுந்
தேவி சரண்யா சிவா
மண் கடந்த விண் கடந்த மாமாயை என்றால் என்
தண் கடம்ப கான் வசிப்பாள் தாயன்றோ கண் கலங்கிச்
சேவிக்கும் சேய்க்குத் திருவருள் தேர்ந்து அருளும்
தேவி சரண் யாசி வா
மண்ணுலகும் விண்ணுலகுங் கடந்து மணி த்வீபத்தில் வசிப்பவள் தேவி மாமாயா என்பதால் என்ன, குளிர்ந்த கடம்ப வன வாசினியானவள் தாய் அன்றோ? கண் கலங்கிச் சேவிக்கும் குழந்தைகட்குத் திருவருளை அவள் தேர்ந்து அருள்வாள் ஆதலால் அத்தேவியைச் சரணடைந்து அவளிடமே வேண்டுகோளை வைப்போம் ( மனிதர்களிடம் அல்ல!)
Goddess Mahamaya lives beyond the realms of earth and heavenly abodes in Manidveepa, but, so what? The Goddess residing in the cool Kadamba forests is still our mother. She bestows her grace amply on those who weep and have a darshan of her, doesnt she, so let us ask from our mother ( rather than other humans)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக