உள்ளத் துருகி யுனதடியா ரேத்தவுனை
வெள்ளப் பெருக்காய் விரைந்துவரும்- வெள்ளி
விடையேறும் வெண்காடர் பாதி யுருவே
யடைவுன்னை விட்டா லெவர்
உள்ளத்து உருகி உனது அடியார் ஏத்த உனை
வெள்ளப் பெருக்காய் விரைந்து வரும் வெள்ளி
விடை ஏறும் வெண்காடர் பாதி உருவே
அடைவு உன்னை விட்டால் எவர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக