திங்கள், 10 மார்ச், 2025

மண்ணாளும் கலி விருத்தம்

மண்ணாளு மன்னர் வணங்குவது முன்னையே
பெண்ணாளும் பாகர்க்கும் பேறான தேவியே
விண்ணாளும் வைகுந்தர் வாழ்த்துவது முன்னையே
கண்ணாளுங் காமாட்சிக் கீடாரு முள்ளாரோ

 

மண் ஆளும் மன்னர் வணங்குவதும் உன்னையே

பெண் ஆளும் பாகர்க்கும் பேறு ஆன தேவியே

விண் ஆளும் வைகுந்தர் வாழ்த்துவதும் உன்னையே

கண் ஆளும் காமாட்சிக்கு ஈடு ஆரும் உள்ளாரோ?

Looking through my Periscope: ShrI KAmAkshi kaTAkshi---- ஸ்ரீ காமாக்ஷி  கடாக்ஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி