செவ்வாய், 4 மார்ச், 2025

கண்ணின்ற கலிவிருத்தம்

கண்ணின்ற கைவல்யங் காமாட்சி கண்ணசைவா
மண்ணின்ற மாதர்க்கு மாண்பளித் தேத்திடுவோம்
விண்ணின்ற தேவரும் வாழ்த்தி மேன்மையுற
வுண்ணின்ற வொண்டொடியா ளோங்குவிப் பாளே 

 

கண் நின்ற கைவல்யம் காமாட்சி கண் அசைவாம்

மண் நின்ற மாதர்க்கு மாண்பு அளித்து ஏத்திடுவோம்

விண் நின்ற தேவரும் வாழ்த்தி மேன்மை உற

 உள் நின்ற ஒண் தொடியாள் ஓங்குவிப்பாளே 

 

காமாட்சியின் கண் அசைவால் கைவல்யம் நமது கண் அவள் நிற்கச் செய்வாள் ( அது நம் முயற்சியால் வரவதன்று) நாம் இம்மண்ணில் நம்முடன் இருக்கும் மாதர்க்கு மாண்பளித்து அவர்களை இறைவியின் அம்சமாய் ஏத்துவதே நாம் செய்யக் கூடிய நன்றியாம், அவ்வாறு செய்ய விண்ணவர்களும் தேவர்களும் வாழ்த்தும் படியாக நாம் மேன்மை பெற, நமது உள்ளொளியாய் விளங்கும் தேவி நம்மை ஓங்கச் செய்வாள் என்பதாம் 

Goddess Kamakshi can grant us Kaivalya in the blink of her eye, it does not happen due to our effort, all that we can do in return is to respect and treat our fellow women as her amsha and treat them with same respect as we give to her, if we do she as our antaryami will raise us to such heights that the celestials also praise us


படம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி