செவ்வாய், 18 மார்ச், 2025

மலைமகள் விருத்தம்

 மலைமகள் பார்வதி கலைமகள் வாணியொ 

  டலைமகள் லக்‌ஷ்மியு மேவுடனாய்

அலைகடன் மாதவ னனமமர் நான்முகன் 

பிறையணி நாதனுங் கூடியுனை 

நிலைகெட தானவர் நிலையுற வானவர் 

மயிலமர் வேலெறி சண்முகனே 

மலைதனில் வீற்றிருங் குறமகள் கோவுனை 

மனமுகந் தேத்துவர் வாழியவே

 சீர் பிரித்து

மலை மகள் பார்வதி கலை மகள் வாணி யொடு அலைமகள் லக்‌ஷ்மியுமே உடனாய்

அலை கடல் மாதவன் அ(ன்)னம் அமர் நான்முகன் பிறை அணி நாதனும் கூடி உனை

நிலை கெட தானவர் நிலை உற வானவர் மயில் அமர் வேல் எறி சண்முகனே

மலை தனில் வீற்று இரும் குற மகள் கோ உனை மனம் உகந்து ஏத்துவர் வாழியவே! 

 

அயிகிரி நந்தினி என்னும் மஹிஷாசுர மர்தினி தோத்திரத்தின் சந்தத்தை ஒற்றி அமைந்தது  

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி