வியாழன், 6 மார்ச், 2025

மனக்கவலை வெண்பா

மனக்கவலை நீக்கு மதிச்சுடரை யேற்று மினம்புரியா வின்ப மருளுந் - தினந்தொழவே மாற்றி யமைத்து வடிவாக்கு மாந்தனை மாற்றிலா மான்மருகன் வேல்

 

 

மனக் கவலை நீக்கும் மதிச் சுடரை ஏற்றும்

இனம் புரியா இன்பம் அருளும் தினம் தொழவே

மாற்றி அமைத்து வடிவு ஆக்கும் மாந்தனை

மாற்று இல்லா மால் மருகன் வேல்  

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி