கலங்காதே கந்தர்கை வேறோன்றிக் காக்கு
மலங்களைந்து மாண்பளிக்கு மன்ன - வலங்கறந்து
பூசனை செய்யாது போனாலுந் தாழ்வில்லை
வாசனை வாய்மொழியும் பாட்டு
கலங்காதே கந்தர் கை வேல் தோன்றிக் காக்கும்
மலம் களைந்து மாண்பு அளிக்கும் மன்ன அலங்கல் தந்து
பூசனை செய்யாது போனாலும் தாழ்வில்லை
வாசனை வாய்மொழியும் பாட்டு
கலக்கம் என்பது தேவையே இல்லை, கந்தர் கை வேல் வந்து நம்மை காக்கும், நமது மலத்தைக் களைந்து மாண்பும் அளிக்கும் நிலைக்கும்படியாக இதற்கு கைம்மாறாக பூமாலை சாத்தி பூசனை செய்யாமல் போனாலும் அது ஒரு பொருட்டன்று, நமது துதிப்பாடல்களே வாசனைப் பூ/பா மாலையாகக் கொள்ளப் படும்
There is absolutely no reason to worry, Skandha's vEl is always there to save us and remove our ignorance and grant us the ultimate knowledge. Even if we cannot offer flower garlands, it is not a big deal (such is the grace of the Lord and his vEl) our songs will be accepted in its place
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக