மும்முலை யுடையாண் முழுமதி வடிவாள்
முருகுரு குறையா முடவிலி யிளையாள் விடையேறுஞ்
செம்மலி னிடமாய்த் திருவொடு திகழ்வா
டுடியிடை மடவா டுயரிடர் களைவா ளிருகாதின்
கம்மலின் வடிவாய்க் கதிர்மதி யுடையாள்
கடைவிழி யழகாற் கதிதரு முறையாள் விரைசாந்தா
ரம்மலை யுடையா ளயிறர பெறுவா
யமரினி லொளிர்வா யறுமுக விளையார் பெருமாளே
மும்முலை உடையாள் முழுமதி வடிவாள்
முருகுரு குறையா முடிவிலி இளையாள் விடை ஏறும்
செம்மலின் இடமாய்த் திருவொடு திகழ்வாள்
துடி இடை மடவாள் துயர் இடர் களைவாள் இரு காதின்
கம்மலின் வடிவாய்க் கதிர் மதி உடையாள்
கடை விழி அழகால் கதி தரும் முறையாள் விரை சாந்து ஆர்
அம் மலை உடையாள் அயில் தர பெறுவாய்
அமரினில் ஒளிர்வாய் அறுமுக இளை ஆர் பெருமாளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக