செவ்வாய், 25 மார்ச், 2025

ஆறக்கரத்தான் செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

ஆறக் கரத்தா னழகிற் றினமாழ்வோர்க் காறக் கரத்தா னருள்வனன்றோ - நூறக் கரத்தான் மலைவீழ வேலெறிந்த வாறு சிரத்தா னனவரதஞ் சீர்

 

 

ஆறு அக்கரத்தான் அழகில் ஆழ்வோர்க்கு

ஆறக் கரம் தான் அருள்வன் அன்றோ நூறக்

கரத்தால் மலை வீழ வேல் எறிந்த ஆறு

சிரத்தான்  அனவரதம் சீர் 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி