செவ்வாய், 25 மார்ச், 2025

ஆறக் கரத்தான் வெண்பா

ஆறக் கரத்தருவா னாறக் கரத்தருவா
னாறக் கரத்தருவா னாறுதித்தா - னாரக்
கரத்தருவா ளாரக் கரத்தருவா ளாரக்
கரத்தருள்வா ளாரக் கருத்து

 

 சீர் பிரித்து :-

ஆறக் கரத் தருவான் ஆறக் கரத் தரு வான் ஆறக் கரத்தருவான் ஆறு உதித்தான் ஆரக் கரத் தருவாள் ஆர் அக்கரத் தரு வாள் ஆரக் கரத்து அருள்வாள் ஆரக் கருத்து  


பொருள் கோண்முறை-

வான் ஆறக் கரம்தருவான் ஆறு அக்கரத் தரு, ஆறக் கரம் தருவான் , ஆறு உதித்தான் ஆரக் கரம் தருவாள் ஆர் அக்கரத் தரு வாள் ஆரக் கரந்து அருள்வாள் ஆரக் கருத்து 

 

பொருள் 

சூரனால் கலங்கியிருந்த வானவர்கள் மனம் ஆறக் கரத்தைத் தருபவனான , ஷடாக்‌ஷரனான, கல்பதருவைப் போன்றவனுமான முருகன் அவ்வாறு ஆறக் கரம் நமக்கும் தந்தருள்வான், இது நிற்க , ஆறுதித்தவனான கந்தப் பெருமாற்கு ஆரத் தழுவித் தனது கரங்களால் அணைப்பவளுமான, உயர்ந்த அழிவற்ற கல்பதருவைப் போன்றவளுமான அம்பிகை, தனது ஒப்பற்ற பொலிவை அழகாக மறைத்து அருள்கின்றாள் இந்த உயரிய கருத்தை(அதாவது தனது மகனான வேலனே யாவும் செய்கின்றானென்று) ஒரு தாய் தான் செய்வதை தனது சிறுபிள்ளை செய்வதாக சொல்லி மகிழ்வாளன்றோ 


Pakki Padal 2025 | ozogama.lt



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி