விடையமர்ந்த நங்கைபங்கன் சடையணிந்த வொன்றினை
யிடையணிந்த விளமைரூபன் றடையகற்ற வேண்டிபின்
மடைதிறந்த வெள்ளமாகக் கொடையளிக்கு மவற்கிளை
சடையகன்ற கோலமெண்ண விடைவிடாது வெற்றியே
விடை அமர்ந்த நங்கை பங்கன் சடை அணிந்த ஒன்றினை
இடை அணிந்த இளமை ரூபன் தடை அகற்ற வேண்டி பின் மடை திறந்த வெள்ளமாக கொடை அளிக்கும் அவனுக்கு இளை(யின்) சடை அகன்ற கோலம் எண்ண இடை விடாது வெற்றியே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக