காமாட்சி காமாட்சி போக்குங் கொடும்பாவ
நேமநிட்டை பார்க்க நியதியில்லை - நாமாட்சி
கைவல்யம் யாவுநல்குங் கண்டுணர்ந்து மெய்யான
வுய்வழியை யோயா துரை
காமாக்ஷி காமாக்ஷி போக்கும் கொடும் பாவம்
நேம நிஷ்டை பார்க்க நியதி இல்லை நா மாட்சி
கைவல்யம் யாவும் நல்கும் கண்டு உணர்ந்து மெய்யான
உய் வழியை ஓயாது உரை
காமாக்ஷி காமாக்ஷி என்று அவள் நாமத்தை உரைக்கக் கடும் பாவங்களும் ஒழியும் , அதைச் சொல்ல நியமமோ நிஷ்டையோ நியதியோ பார்க்க வேண்டும் என்பதில்லை , அவ்வாறு சொன்னால் , நம் மொழி மேன்படும், புலமை வரும் என்பது மட்டுமன்று கைவல்யமே கிட்டும், ஆதலால் இவ்வுலக இன்பங்கள் யாவும் கிட்டும் என்பதில் சற்றேனும் ஐயம் இல்லை, இதைக் கண்டுணர்ந்து மெய்யான உய்வு அவள் நாமம் சொல்வதே என்று அறிந்து கொண்டபின் அதை ஓயாதுரைப்பதே பண்பு !
By repeating the mantra Goddess Kamakshi's name, all cardinal sins are extinguished, we do not even need to follow specific rules to utter the sacred name, her name grants us not only excellence in speech and worldly things, but the ultimate Kaivalya too! Having realized this we should follow the true path of ceaselessly repeating her name.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக