புதன், 19 மார்ச், 2025

மராமரம் வெண்பா (அயோத்தி)

 

மராமர மேழழித்தான் மாயமான் மாய்த்தான்
பராபர னென்றாலும் பாரிற் - சராசரி
மாந்தனைப் போனடித்தான் மாதிருவர் சிந்தைதொடான்
வாழ்ந்ததிரு மண்மிதித்தாற் பேறு
 
 
மரா மரம் ஏழ் அழித்தான் மாய மான் மாய்த்தான்
பராபரன் என்றாலும் பாரில் சராசரி
மாந்தனைப் போல் நடித்தான் மாது இருவர் சிந்தை தொடான்
வாழ்ந்த திரு மண் மிதித்தால் பேறு
 
May be an image of 1 person, temple, door and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...