சீறுமாறு சடையணிந்த சந்த்ரசேக ரங்கமே
வாறுகூறு தாண்டிவந்து மாலைசூடு மங்கையா
யேறுமாறி யோகிகட்குங் கூறொணாத கூறெனக்
காறுமாறு நீயிருக்க வார்ப்பரிப்ப தில்லையே
சீறும் ஆறு சடை அணிந்த சந்திரசேகர் அங்கம் மேவு
ஆறு கூறு தாண்டி வந்து மாலை சூடு மங்கையாய்
ஏறும் ஆறு யோகிகட்கும் கூறு ஒண்ணாத கூறு எனக்கு
ஆறும் ஆறு நீ இருக்க ஆர்ப்பரிப்பது இல்லையே
கங்கையைச் சடையிலணிந்த சிவபெருமானின் பாதியாயிருப்பவளே, நீ ஆறு ஆதாரங்களைத் தாண்டி வந்து உன் மணாளனை மணக்கிறாய், இக்குண்டலினி சத்தியின் சூட்சுமம் யோகிகட்குக் கூட தெரியாது ஒன்று அப்பேற்பட்ட நீ எனக்கு ஆறுதல் தரக்கூடிய வழியாய் இருக்கையில் நான் ஏன் ஆர்ப்பரிக்க வேண்டும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக