காற்றே புதல்வன் காகுத்த பத்தன் வாற்றே கொடியாய் விசயற் கருளிக் கூற்றே அனைய கொடும்போர் நடத்தி நூற்றவர் வீழ நுண்மதி செலுத்திக் காற்றே அனைய வைவரைக் காத்த பாற்றிரை துயிலும் பரமன் மெச்சு நாற்றிசை போற்று மாறிரு மருகா
தோற்றிசைந் தானே வீற்றிரு மயிலாய்ச் சாற்றிடு சேவலங் கொடியாய்ச் சூர னேற்றனை யன்பா யேறூர்ந்தா னேறே வேற்றே மாற்றோர் கூற்றே சீற்றஞ் சிரிப்பா னிறம்புனை வோனே
சீர் பிரித்து :-
கால் தே புதல்வன் காகுத்த பத்தன் வால் தே கொடியாய் விசயற்கு அருளி கூற்றே அனைய கொடும் போர் நடத்தி நூற்றவர் வீழ நுண் மதி செலுத்தி காற்றே அனைய ஐவரைக் காத்த பால் திரை துயிலும் பரமன் மெச்சும்
நால் திசை போற்றும் மால் திரு மருகா! தோற்று இசைந்தானே வீற்று இரு மயிலாய்
சாற்றிடு சேவல் அம் கொடியாய் சூரன் ஏற்றனை அன்பாய் ஏறு ஊர்ந்தான் ஏறே வேல் தே! மாற்றோர் கூற்றே ! சீற்றம் சிரிப்பால் நிறம் புனைவோனே
பொருள்:-
வாயுபகவானின் புத்திரனான, இராமரின் பத்தனான வாலை உடைய தெய்வமான அனுமாரைக் கொடியாக அர்ஜுனற்கருளி , இறப்பே உருவெடுத்தது போன்று கொடும் போரான மாபாரதத்தை நடத்தி, நூறூ கௌரவர்கள் போரில் வீழும் படியாக நுண்மையான பல உத்திகளைக் கையாண்டு. பிராணனைப் போன்று பாண்டவர்களைக் காத்த பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரமனான திருமால் மெச்சத் தக்கவனே! நாலு திசைகளிலும் போற்றுதலுக்குரிய திருமால் மருகனே, நீ போரில் வென்ற சூரனை மிக்க அன்பினால் அழிக்காமல் உனது சேவலாகவும் மயிலாகவும் ஆக்கிக் கொண்டாய், ரிஷப வாகனத்தானான சிவபெருமானின் செல்வனே, வேலை உடைய தேவனே எதிரிகளின் காலனே! நீ சீற்றங் கொள்ளும் போதும் புன்சிரிப்பு என்னும் நிறத்தில் இருப்பவனன்றோ!
The supreme Lord, who gifted VayuPutra and Rama Bhakta Hanuman to remain as the flag of Arjuna, the one who became death itself and enacted the massive war known as Mahabaratha and devised minute strategies to defeat the 100 Kauravas, and protected Pandavas like their Prana and the one who sports Yoga Nidra in the ocean of milk, praises you! You have praise in all 4 directions and you are the nephew of MahaLakshmi and MahaVishnu, due to your exceeding love, you even did not destroy Soora whom you defeated in the battle but instead transformed him into your mount the peacock and your beautiful rooster flag, you are the son of Lord Shiva who sports the RIshaba as his mount, Oh Lord with the mighty vEl and vanquisher of foes, even when you show anger you paint it in the colour of smile, don't you!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக