புதன், 16 ஏப்ரல், 2025

முந்நீர் விருத்தம்

காத்தழித்துப் படைத்துநின்ற நீரின்செய்கை மூன்றுள
மாத்திரைக்கு மண்பிறந்த சாத்திரங்கள் கூறுமே
பூத்திருக்க புவனமெங்கு நீரின்றேவை யவசியம்
போர்த்திநிற்கு மூழிநீரி னுலகடங்கிப் போகுமே

 

 சீர் பிரித்து:-

காத்து அழித்துப் படைத்து நின்ற நீரின் செய்கை மூன்று உள

மா திரைக்கு மண் பிறந்த சாத்திரங்கள் கூறுமே

பூத்து இருக்க புவனம் எங்கும் நீரின் தேவை அவசியம்

போர்த்தி நிற்கும் ஊழி நீரின் உலகு அடங்கிப் போகுமே

 

பொருள்:-

படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் நீர் செய்கின்றது. மாபெரும் கடலின்று (நீரிலிருந்து) தான் மண் ஆகிய பூதம் பிறந்ததென்பது வேதத்தின் கூற்றாகும்(படைத்தல்). அனைத்துலகையும் போஷிக்க (பூத்து நிற்க) நீர் அவசியம் ஆகின்றது (இது காத்தல்) அதே போன்று ஊழிக் காலத்தில் உலகத்தையே போர்த்தி நிற்கின்றது நீர் (இது அழித்தலைக் குறிக்கின்றது) முத்தொழில்களையும் செய்வதால் நீர் முந் நீராயிற்று !

The Water element performs the threefold acts of creation destruction and preservation, when it gives birth to earth element it creates, when it sustains the earth ( through various rivers/ rain) it performs sustenance and in the times of deluge it engulfs the whole world and aids destruction!

Thinakkural.lk

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி