வேலீமாதா மாமாயா காரீசீதா காமாயீ
யீமா கா தாசீ ரீகா யாமாமாதா மாலீவே
சீர் பிரித்து
வேல் ஈ மாதா மாமாயா காரீ சீதா காமாயீ
ஈ மா கா தாசீ ரீகா யாமா மாதா மால் ஈவே
பொருள்கோண்முறை
வேல் ஈ மாதா மாமாயா காரீ சீதா காமாயீ
மாதாசீ ரீகா யாமா மாதா மால் ஈவே ஈ கா !
பொருள்
கந்தனுக்கு வேலை ஈந்தவளே, மாமாயை தேவியே,கரு நிறத்தவளே , சீதையாக வந்தவளே (குளுமை என்னும் பண்புடையவளே) , காமாக்ஷி அன்னையே , தச மஹா வித்தையாக வருபவளே , ஹ்ரீம்காரம் என்னும் மந்திரத்துக்கு உரியவளே, நள்ளிரவில் நட்டமாடும் சிவ சொரூபியே, அவர்தமக்கு அன்னையும் ஆனவளே, இவ்வாழ்வு என்னும் மயக்கிற்கான தீர்வே எம்மைக் காத்தருள்வாயாக !
ஈவு- தீர்வு
#மாலைமாற்று #palindrome
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக