தேவசேனை நாதனின் றிருமணத்துக் கோலமோ
சீதைராமன் சேர்ந்திடுந் திருமணத்துக் கோலமோ
பாவைசெய்த பைங்கிளி பதியடைந்த கோலமோ
பூசைசெய்த பார்வதி பதியடைந்த கோலமோ
பூவமர்ந்த பாவையுந் திருவரங்க நாதனும்
புன்சிரிப்புப் பூத்திட மருவுகின்ற கோலமோ
சேவைகாண வுற்றதே திருவளித்த பேறென
சீர்விளங்கு பங்குனி யுத்திரத்தை யேத்துவாம்
தேவ சேனை நாதனின் திருமணத்துக் கோலமோ
சீதை ராமன் சேர்ந்திடும் திருமணத்துக் கோலமோ
பாவை செய்த பைங்கிளி பதி அடைந்த கோலமோ
பூசை செய்த பார்வதி பதி அடைந்த கோலமோ
பூ அமர்ந்த பாவையும் திருவரங்க நாதனும்
புன்சிரிப்புப் பூத்திட மருவுகின்ற கோலமோ
சேவை காண உற்றதே திரு அளித்த பேறென
சீர் விளங்கு பங்குனி உத்திரத்தை ஏத்துவாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக