வெள்ளி, 11 ஏப்ரல், 2025

தேர்கொண்ட விருத்தம்

 தேர்கொண்ட விசயற்குக் கொடியானாய் 

      வால்கொண் டிலங்கைக்குத் தீவைத்தாய்

வார்கொண்ட திருமகளைக் காண்பதற்கே

     வான்கொண்ட பாதையினைத் தேர்ந்தெடுத்தாய்ப்

பார்கொண் டிராமகாதை பரப்பிடவே

     பேர்கொண்ட வைகுந்தநீ வேண்டிலையே

சீர்கொண்ட ஸ்ரீராம னாமமொன்றே

    நீர்கொண்ட மீனைப் போற் சுவாசித்தாய் 

 

 

தேர் கொண்ட விசயன்கு கொடி ஆனாய்

வால் கொண்டு இலங்கைக்குத் தீ வைத்தாய்

வார் கொண்ட திருமகளைக் காண்பதற்கே

வான் கொண்ட பாதையினைத் தேர்ந்தெடுத்தாய்

பார் கொண்டு இராம காதை பரப்பிடவே

பேர் கொண்ட வைகுந்தம் நீ வேண்டிலையே

சீர் கொண்ட ஸ்ரீ ராமன் நாமம் ஒன்றே

நீர் கொண்ட மீனைப் போல் சுவாசித்தாய்  

 

You remained as the flag for Arjuna's chariot, lit the island of Lanka with your tail, to see Goddess Lakshmi(Seetha)  you chose the path of sky as your travel, and in order to keep listening to and spreading the history of Rama, you remained on this earth even refusing Vaikunta! You made the Nama of SriRama alone as your breath as essential as water is to a fish!

படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி