செவ்வாய், 13 மே, 2025

தொந்திநாதன் கலி விருத்தம்

 தொந்திநாத னெளிமையுங் கங்கைநாதன் ஞானமு
முந்திதோற்று விதியின்றாதை யொப்பிலாத வடிவமு
மந்தரித்தன் கருணையு மருக்கன்போல  வெளிச்சமுஞ்
செந்தினாதன் சேர்த்தணிந்த விந்தைமேவு கோலமோ

 

 

தொந்தி நாதன் எளிமையும் கங்கை நாதன் ஞானமும் 

உந்தி தோற்று விதியின் தாதை ஒப்பு இ(ல்)லாத வடிவமும்

அந்தரி தன் கருணையும் அருக்கன் போல வெளிச்சமும்

செந்தில் நாதன் சேர்த்து அணிந்த விந்தை மேவு கோலமோ 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி