செவ்வாய், 13 மே, 2025

உலகம் சிந்து (செவ்வாயிற் செவ்வேள்)

உலக முவக்கு முமைமைந்த - வுள்ளக் கலக மகற்று மருட்கந்த 

நிலவுங் கதிருஞ் சுடர்நெருப்பு - முன் னிகரில் விழிமூன் றெனவொளிருந் 

திலகப் பெயரிற் றிகழமரில் -வெற்றித் திலகந் தருவா யருணிகரில் 

கலியின் வலியைத் தகர்த்தெறியு - மெங் கருணைக் கடலின் றுதிமிளுரும்

 

 

உலகம் உவக்கும் உமைமைந்த உள்ளக் கலகம் அகற்றும் அருள்கந்த நிலவும் கதிரும் சுடர்நெருப்பும் உன் நிகர் இல் விழி மூன்று என ஒளிரும் திலகப் பெயரில் திகழ் அமரில் வெற்றித் திலகம் தருவாய் அருள் நிகர் இல் கலியின் வலியைத் தகர்த்து எறியும் எம் கருணைக் கடலின் துதி மிளிரும் 

 திலகம்- சிந்தூர்

படம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி