எழுதாமறையின் சிறப்பறியா ரெழுதாமரையின் சிறப்பறியார்
மழுவார்மரையார் சிறப்பறியார் முதுமானுடர்தஞ் சிறப்பறியார்
தொழுவார்முறையின் சிறப்பறியார் கழுவேற்றியவர் சிறப்பறியார்
பழுதாயழியும் பிறப்பறியார் பணிவாயமர்ந்தார் சிறந்தா ரவரே
சந்தக் குழிப்பு ஒவ்வொரு அரையடிக்கும்
"முருகா முருகா முருகா முருகா"
எழுதா மறையின் சிறப்பு அறியார் எழு தாமரையின் சிறப்பு அறியார்
மழு ஆர் மரையார் சிறப்பு அறியார் முது மானுடர் தம் சிறப்பு அறியார்
தொழுவார் முறையின் சிறப்பு அறியார் கழு ஏற்றியவர் சிறப்பு அறியார்
பழுதாய் அழியும் பிறப்பு அறியார் பணிவாய் அமர்ந்தார் சிறந்தார் அவரே !
எழுதாக் கிளவி /மறையாகிய வேதத்தின் சிறப்பை அறியாதவர்கள், எழும் தாமரையின் (ஞானத்தின்) சிறப்பை அறியாதார், மழுவும் அழகிய மானும் உடைய சிவ பெருமானின் சிறப்பை அறியாதார், நம் மரபில் முதிர்ந்த மானுடக் குலம் என்னவெல்லாம் செய்த சிறப்பு உடையது என்பதை அறியாதார், அடியார்களும் அவர்களின் முறையும் பற்றி அறியாதார், சமணர்களைக் கழுவேற்றிய திருஞான சம்பந்தப் பிள்ளையாரைப் பற்றி அறியாதவர்கள், பழுதாகி இவ்வுடல் அழியும், பின் பிறப்பிறப்பு என்ற சுழற்சியில் உழல்வோம் என்பதைப் பற்றி அறியாதவர்கள், ஆதலால் யாதும் தெரிய வில்லை என்று ஒப்புக் கொண்டு, பணிவாய் அமர்ந்து இப் பிரபஞ்சத்தை(இறைவனை) நோக்குபவரே சிறந்தவர்கள் என்று அறிக!
Those who do not know the importance of Vedas, cannot understand, the rise of wisdom like a blooming lotus flower, Lord Shiva who holds the axe and a beautiful deer in his hand, the wisdom of age old human kind, the tradition and ways of devotees, the great Thiru Gnana Sambandhar, and do not even realise that they are caught in this cycle of birth and death endlessly and that this body is meant to perish sooner or later, so, the really wise ones are those who just sit in humility!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக