அத்திரத்தி னாற்றலற்றுப் பாரதத்துப் போரினி
லத்திரத்தின் மனமுழன்ற வர்ச்சுனர்க்குப் பாகனா
யத்திரத்தை யேவநின்ற வர்க்கன்மைந்தன் மாய்த்தவு
னத்திறத்தை விரித்துரைக்க வெத்திறத்தி லேலுமே
சீர் பிரித்து
அத்திரத்தின் ஆற்றல் அற்றுப் பாரதத்துப் போரினில்
அத்திரத்தில் மனமுழன்ற அர்ச்சுனர்க்குப் பாகனாய்
அத்திரத்தை ஏவ நின்ற அர்க்கன் மைந்தன் மாய்த்த உன்
அத் திறத்தை விரித்து உரைக்க எத்திறத்தில் ஏலுமே?
பொருள்
அஸ்திரத்தின் ஆற்றல் பயன்படுத்தாமல் (நீ எடுத்த ப்ரதிஞையால்) மாபாரதப் போரில் தனது ஸ்திரத்தன்மையை இழந்து மனமுழன்ற அர்ச்சுனனது சாரதியாய் அவனுக்கும் (பின்பு அனைத்துலகிற்கும்) அறிவுரை வழங்கி, தனது தேர்ந்த அஸ்திரங்களைப் பிரயோகம் செய்ய நின்ற சூரிய புத்திரனான கர்ணனை மாய்த்த நினது அந்தத் திறத்தை விரித்து உரைக்க எத் திறத்தாரால் இயலும்? (இயலாது என்பதாம்!)
You took the vow of not using any weapons and agreed to play the meager role of charioteer for Arjuna, and while he was despondent you delivered the Bhagavath Geetha and made him win the battle against the mighty warrior in son of Surya Karna, who can pen down your exploits? Even the most poetically astute cannot!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக