தந்தை சொல்லே கதியென் றிருந்தா
னங்கை சொல்லைத் தீவிற் பணிந்தா
னெந்தச் சொல்லைக் கையெடுப் பானோ
வந்தச் சொல்லே மெய்யெனுந் தேனோ
சீர் பிரித்து
தந்தை சொல்லே கதி என்று இருந்தான்
நங்கை சொல்லைத் தீவில் பணிந்தான்
எந்தச் சொல்லை கை எடுப்பானோ
அந்தச் சொல்லே மெய் என்னும் தேனோ
பொருள்
தந்தை சொல்லே கதி என்று இருந்தா இராம பிரான்றன்
நங்கை யான சீதா பிராட்டி சொல்லைத் தீவிற் சென்று பணிந்தவனான ஆஞ்சநேயன்
எந்தச் சொல்லைக் கையாண்டாலும் அவன் நவ வியாகரண பண்டிதன் என்பதால்
அச்சொல்லே உண்மையின் வடிவமாகவும் தேனைப் போன்று இனிமையாகவும் இருக்கும் என்பதாம்
இப்பாடல் சௌபாயீ என்னும் ஹிந்தி யாப்பில் அமைந்தது (ஹனுமான் சாலிசா போன்று)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக