சனி, 31 மே, 2025

மாயனே வெண்பா

மாயனே யென்மனத்தி னாயக னென்றெண்ண
மாயனே நன்கு வழிகாட்டி - மாயனே
யாவுமாய் நின்றா னெனவுணரப் பேறுற்றாற்
பாவமோ பாருடைத்த பற்று

 

 சீர் பிரித்து:-

மாயனே என் மனத்தின் நாயகன் என்று எண்ண

மாயனே நன்கு வழிகாட்டி மாயனே

யாவுமாய் நின்றான்  என உணரப் பேறு உற்றால்

பாவமோ பார் உடைத்த பற்று 

 

Mayan/ Krishna is my heart's hero, to learn this he himself comes as a Guru and teaches! And not only that he also becomes every manifesting form in all worlds, if one is fortunate to receive this understanding through his grace, then what is the harm in loving this world/ various forms, as they are verily him!

 

பொருள்:-

 

மாயனே என் மனத்தின் நாயகனென எண்ணும் படி அவனே நன்குணர்த்தினன் , அது மட்டுமன்றி அவனே யாவுமாய் விரிகிறான் என்றும் அவன் உணர்த்தலின் ஊடாக பேறு உற்றோமே ஆயின் இப்பாரின் மீது நாம் வைக்கும் பற்றும் பாவமாகுமோ ? ஆகாது என்பதாம் ஏனென்றால் அவனே யாவுமாய் நிற்கின்றனன் அன்றோ!

 

                                   

படம் 

 

 

           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி