தோற்றமில்லை முடிவுமில்லை சோதியான தத்துவ
மாற்றமில்லை தோல்வியில்லை மாசிலாத வேலவ
வேற்றமில்லை யென்றுமில்லை யேத்திடாது நின்னையே
கூற்றுமில்லை குறையுமில்லை போற்றுவார்க ணென்றுமே
தோற்றம் இல்லை முடிவும் இல்லை சோதி ஆன தத்துவ
மாற்றம் இல்லை தோல்வி இல்லை மாசு இல்லாத வேலவ
ஏற்றம் இல்லை என்றும் இல்லை ஏத்திடாது நின்னையே
கூற்றும் இல்லை குறையும் இல்லை போற்றுவார்கண் என்றுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக