செவ்வாய், 6 மே, 2025

செவ்வரளி வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

செவ்வரளிப் பூத்தொடுத்துச் செவ்வேட்குச் சாற்றிமகி
ழெவ்வேளை யேலுமோ யானறியே -னிவ்வேளைப்
பாத்தொடுத்துப் பூவன்ன பாவித் தணுகுவதே
யாத்தறிந்த வேற்ற வழி

 

 

செவ் அரளிப் பூத் தொடுத்துச் செவ்வேள்குச் சாற்றி மகிழ்

எவ் வேளை ஏலுமோ யான் அறியேன் - இவ் வேளைப்

பாத் தொடுத்துப் பூ அன்ன பாவித்து அணுகுவதே

யாத்து அறிந்த ஏற்ற வழி

 

படம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி