ஏகா நேகா வையாறா
றாகா ழீயா மாதேவா
வாகா மாயா வீயாநா
நாகா சேயா வீடீயே
றா நா
யா கா கா யா
வை ழீ சே வீ
கா யா யா
நே வீ மா மா
கா டீ தே கா
ஏ வா
சீர் பிரித்து :-
ஏக அநேகா ஐயாறு ஆறா காழீயா மாதேவா
வாகா மாயா வீய் ஆ நா நாகா சேயா வீடு ஈ ஏ
பொருள்:-
ஒன்றாய் இருப்பவனே , பலவாய் விரிந்தவனே , ஐயாறு என்னும் தலமே ஆறாக விளங்கும் என்று காண்பித்தவனே, சீர்காழிப் பதியின் ஈசனே, மஹா தேவனே
வாகுடைய சுந்தரனே, மாயையை அழித்து ஆக்களைக் காக்க வல்லவனே, தீச்சுடர் வடிவானவனே, நாகாபரணம் அணிந்தவனே, சிவந்த நிறத்தைத் தரித்தவனே, வீடு பேறு என்னும் நின்னது திருவடி நீழலை எமக்கு அருள்வாயாக.
(ஐயாறாறா என்பதற்கு முப்பத்தாறு தத்துவங்களக்கும் கடந்த விளங்கும் தலைவனே என்றும் கொள்ளல் தகும்)
The One, who became the many, who showed that the sacred place of Thiruvaiyaaru can be the way for us, or the one who is beyond the thirty six Tatvas, the lord of Seergaazhi, Maha Deva, handsome one(Sundara) one who destroys the veil of Maya from Jeevas, one who is of the form of a flaming fire (Agni) , one who wears snakes as ornaments, and one who is of ruddy complexion, grant us salvation (thy lasting abode)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக