இளங்காதல் சோடி யிணையிலா வின்ப
மளந்தாலு மிங்கறிவார் யாஅர் - விளங்கா
துளந்தெளிந் துண்மை யுணர்வுடையார்க் கல்லா
லிளந்தளி ரின்ப வெழில்
சீர் பிரித்து
இளம் காதல் சோடி இணை இ(ல்)லா இன்பம்
அளந்தாலும் இங்கு அறிவார் யாஅர் - விளங்காது
உ(ள்)ளம் தெளிந்து உண்மை உணர்வு உடையார்க்கு அல்லால்
இளம் தளிர் இன்ப எழில்
பொருள்:-
இளங்காதல் ஜோடிகள் அனுபவிக்கும் இணையில்லா இன்பத்தைப் பிறரால் அறியவியலுமா? அது அளந்து அறியக் கூடிய அறிவல்லவே- அஃது ஒரு அனுவவம். ஆதலால் அவ்வனுபவம் பிறர்க்கு விளங்காது என்பதாம். அவ்வாறே உள்ளம் தெளிந்து மெய்யுணர்வு உடையவர்களுக்கன்றி இளம் தளிரின் இன்ப எழில் விளங்காது, குறிப்பால் இறையனுபவம் மானுடக் காதலின் உவமையால் கூறப்பட்டது, இளம் தளிரின் இன்ப எழில் என்பது அறிவால் விளங்கிக் கொள்ளவியலாது அனுபவித்தால் தான் விளங்கும், இறையனுபவமும், இயற்கையை இரசிப்பதைப் போன்று, இளங்காதலர்கள் காதல் கொள்வது போன்று அனுபவப் பாடம் என்பதாம்.
The peerless pleasure that is experienced by two youthful lovers cannot be understood by others scientifically (even with measuring equipment!) Similarly, experiencing the beauty of nature and the Sadhana or devotion to God cannot be understood by intellect, it is an experience which can be understood only by people with a serene mind and who have intuition to perceive the truth!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக