திங்கள், 5 மே, 2025

அங்கமேவு கலி விருத்தம்

 
அங்கமேவு  பணியணிந்த கங்கைநாதன் பங்கின
ளங்கைதங்கு சங்குசாடு செங்கணாதன் பங்கின
டுங்கவேத னாற்றலான தூயஞான மங்கையுஞ்
சிங்கவேறு நங்கையென்ற சித்தமேவ முத்தியே



அங்கம் மேவு பணி அணிந்த கங்கை நாதன் பங்கினள்
அம் கை தங்கு சங்கு சாடு செம் கண் நாதன் பங்கினள்
துங்க வேதன் ஆற்றல் ஆன தூய ஞான மங்கையும்
சிங்க ஏறு நங்கை என்ற சித்தம் மேவ முத்தியே

 Saraswati, Lakshmi and Parvati - The ...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி