செவ்வாய், 17 ஜூன், 2025

மூன்றினங்கள் கலி விருத்தம்

மூன்றினங்கள் கொண்டநாம முருகநாம மென்பது
மூன்றுநான்கு  கரமுடைத்த  னுயிரெழுத்தை யொக்கவே
மூன்றிரண்டு முகங்கள்சேர மெய்யெழுத்துந் தோன்றிட
மூன்றுபுள்ளி யாய்தமாக தமிழுடைத்த வேலனே

 

 

 மூன்று இனங்கள் கொண்ட நாமம் முருக நாமம் என்பது

மூன்று நான்கு கரம் உடைத்தன் உயிர் எழுத்தை ஒக்கவே

மூன்று இரண்டு முகங்கள் சேர மெய் எழுத்தும் தோன்றிட

மூன்று புள்ளி ஆய்தமாக தமிழ் உடைத்த வேலனே

 

ஐந்து முகம் கொண்ட முருகன் கோயில் பற்றி தெரியுமா? - ஐபிசி பக்தி 

முருக என்ற நாமம் மெல்லினம் இடையினம் வல்லினம் ஆகிய முவ்வினங்களையும் தன்னுளே அடக்கியது, பன்னிரண்டு கரமும் உயிரெழுத்தின் உருவகம், அதனுடன் ஆறு முகங்களைச் சேர்த்தால் மெய்யெழுத்தின் உருவகம் ஆகும், அவன் கையில் உள்ள வேலாயுதம், முப்பாற்புள்ளியான ஆய்த எழுத்தின் உருவகம், ஆகையால் அவன் என்றும் தமிழை உடைமையாகக் கொண்டவன்!                                    

 

 

                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி