புதன், 18 ஜூன், 2025

சூதொரு கட்டளைக் கலித்துறை

சூதொரு பாகங் களவொரு பாகந் துணையிருக்க 
வாதொரு பாக மதமொரு பாக மதிமறைக்க
யாதொரு கால மமையப் பெறுமோ வவனருளான்
மாதொரு பாகன் மலரடி நீழன் மகத்தடைவே 

 

 

 சூது ஒரு பாகம் களவு ஒரு பாகம் துணை இருக்க

வாது ஒரு பாகம் மதம் ஒரு பாகம் மதி மறைக்க

யாது ஒரு காலம் அமையப் பெறுமோ அவன் அருளால்

மாது ஒரு பாகன் மலர் அடி நீழல் மகத்து அடைவே

 

Deceit and falsehood operate which lead to fights and clinging to opinions and religious attachments without wisdom engulf me, these cloud the inner mind. This being the case when will a time come when by the grace of Lord Shiva (He who gave half of himself to Parvathy) we attain salvation at his holy feet!?

 

படம் 

 

 

 

                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி