வெங்கட் பணியணை வேலை துயில்கூரும்
வங்கக் கடல்கடைந்த மாதவனை - யெங்கட்
கிறைவனை யெந்நாளு மேத்துவார்க் குண்டே
நிறைவள நீள்பிரசன் னா
வெம் கண் பணி அணை வேலை துயில் கூரும் வங்கக் கடல் கடைந்த மாதவனை எங்கட்கு இறைவனை எந் நாளும் ஏத்துவார்க்கு உண்டே நிறை வளம் நீள் பிரசன்னா
வெம்மை கொண்ட கண்களை உடைய பணியைப் (ஆதி சேஷன்) படுக்கையாகக் கொண்டு பாற்கடலின் கண் விருப்பம் கொண்டுறங்கும் , வங்கக் கடல் கடைந்த மாதவனை, எங்கட்கெல்லாம் இறைவனை எந்நாளும் ஏத்துவார்க்கு உண்டே, நிறை வளமும் நீண்டு கொண்டே செல்லும் மகிழ்வும்
Those who constantly sing the praises of our Lord Madhava, who likes to sleep on the ocean of milk under the bed of the snake with fiery eyes, who churned the ocean of milk, will be endowed with all kinds of wealth and ever lasting happiness.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக