ஆதியான புருஷனாய் மூலமான ப்ரக்ருதியா
யன்புடைத்த தாயுமா யறிவளிக்குந் தந்தையாய்
தாதுவைந்தி னூடதா யாவுமாக பரவினாய்ச்
சாகரத்தி லுழன்றிடு நாதியற்ற ஜீவர்க்குக்
கோதிலாத கலமதாய் வழிநடத்திக் காத்திடுங்
கேடுசெய்யு மகிடனைக் கொன்றதுர்க்கை தேவியே
வேதாநான்கு போற்றிடு மீடிலாத வொருவளுன்
வீழ்விலாத வெற்றியை யெண்ணியேத்த லின்பமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக