பூனைபோல வாற்றல்சேமி புவனமேழும் வெல்லலா
மானைபோல மதியிருக்க யாருனக்கு வல்லவர்
ஞானிபோல நிலைநிறுத்தி நல்லதல்ல திரண்டையுந்
தானகற்றி யுண்மைகாண நாளுனக்கு வெற்றியே
பூனை போல ஆற்றல் சேமி புவனம் ஏழும் வெல்லலாம்
ஆனை போல மதி இருக்க யார் உனக்கு வல்லவர்
ஞானி போல நிலை நிறுத்தி நல்லது அல்லது இரண்டையும்
தான் அகற்றி உண்மை காண நாள் உனக்கு வெற்றியே
பூனையானது தனது ஆற்றலைச் சேமித்த வண்ணம் அடங்கி இருக்கும், தேவை என்று வரும் போது பாயும், அவ்வாறு இருந்தால் புவனங்கள் ஏழையும் வெல்லலாம், ஆனை போன்ற கூர் மதி உனக்கு அருளப்பட்டது, ஆகையால் பிறர் நம்மைவிட வல்லவர் என எண்ணல் தகா! ஞானியைப் போல தான் (அகந்தை) என்னும் கருத்தை அகற்றி நல்லது அல்லது ஆகிய இரண்டு கருத்தையும் நிலை நிறுத்தி உண்மையைக் காண என்றும் உனக்கு வெற்றி தான்!
Save energy like a cat, which appears to be lazy, but can pounce in an instant and is ready to act when needed, if we follow this can't we win all seven worlds? We have been blessed with an intellect like an elephant, so it is not fair to consider someone to be greater than us, Like a true wise person, removing the thought of 'I" or ego and viewing both good and bad with a view to finding the truth if we do practice, does not victory flow as the most natural outcome?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக