நாள்கொண்ட மீனு நடுங்க வழகாய் நவமிருக்குங்
கோள்கொண்ட வாற்றலுங் கும்பிட் டளிதரக் கோட்டரையன்
மாள்கொண்ட சத்தி மகற்களிக் கச்சூர் மடித்தகந்த
வேள்கொண்ட வேலை விடாதுள்வார்க் கில்லை வினைவயமே
நாள் கொண்ட மீனும் நடுங்க அழகாய் நவம் இருக்கும்
கோள் கொண்ட ஆற்றலும் கும்பிட்டு அளி தரக் கோட்டு அரையன்
மாள் கொண்ட சத்தி மகற்கு அளித்க்கச் சூர் மடித்த கந்த
வேள் கொண்ட வேலை விடாது உள்வார்க்கு இல்லை வினை வயமே
(இதன் பொருள்) கோட்டரையன் மாள் கொண்ட சத்தி மகற்கு அளிக்க – மலையரசன் மகளான உமையம்மை, கொண்ட சத்திகளை (ஒன்று திரட்டி) தனது மகனுக்கு அளிக்க; சூர் மடித்த கந்தவேள் கொண்ட வேலை விடாது உள்வார்க்கு – சூரனை மடித்த கந்தவேள் (கையில்) கொண்ட வேலாயுதத்தை இடைவிடாது சிந்திப்பார்க்கு; வினைவயம் இல்லை- வினை வயமும் இல்லை;
நாள் கொண்ட மீனும் நடுங்கி அளி தரும்- 27 நாள் மீனும் அஞ்சி ஆசி வழங்கும்;
அழகாய் நவம் இருக்கும் கோள் கொண்ட ஆற்றலும் கும்பிட்டு அளி தரும் – அழகாக இருக்கும் 9 கோள்கள் கொண்ட ஆற்றலும் வணங்கித் தன் ஆசியையும் வழங்கும் (என்றவாறு)
அளிதரும் என்பது நாளுக்கும் கோளுக்கும் தனித்தனியே கூட்டப்பட்ன. மகள் மாள் என நின்றது. வேலை விடாது நினைந்தால் வினைகெட்டு நல்லருள் வரப்பெறும் ஆதலின் மனமே நீ அதனைச்செய் எனப் பணித்ததாம்.
இது கட்டளைக்கலித்துறை. நவம் சத்தி வடசொல்.
27 stars (Nakshatras) that rule the days shudder and the beautiful 9 planets bow down and offer their blessings to those who worship the VEl which was given by Himavan's daughter Goddess Parvathi to her son Kumara to defeat Tarakasura in the battle. Those who constantly meditate on the vEl are not bound by Karma!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக