தற்புகழ்ச்சி யிழிவதென்று சாத்திரங்கள் கூறியுங்
விற்பதற்கு வேறதின்றி தன்னையேபு கழ்வதோ
வற்பனுக்கு வாழ்விலங்க வப்பனைம றப்பதோ
வெற்பெடுத்து மாரிகாத்த வேலைவண்ணற் பணிமினே
சீர் பிரித்து -
தற்புகழ்ச்சி இழிவு அது என்று சாத்திரங்கள் கூறியும்
விற்பதற்கு வேறது இன்றி தன்னையே புகழ்வதோ
அற்பனுக்கு வாழ்வு இலங்க அப்பனை மறப்பதோ
வெற்பு எடுத்து மாரி காத்த வேலை வண்ணன் பணிமினே
பொழிப்பு-
தற்புகழ்ச்சி இழிவதென்று சாத்திரங்கள் கூறியும்- தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது ஒரு இழிவான செயல் என்று சாத்திரங்கள் கூறி இருந்தும்
விற்பதற்கு வேறது இன்றி தன்னையே புகழ்வதோ - விற்பதற்கு வேறு பொருல் யாதும் கிடைக்காமல், தன்னைத் தானே பிரபலப் படுத்தும் நோக்கில் தன்னையே புகழ்ந்து கொள்ளலாமோ? (கூடாது என்பதாம்)
அற்பனுக்கு வாழ்வு இலங்க அப்பனை மறப்பதோ- ஒரு சாமனிய மனிதனுக்கு திடீரென்று வாழ்வு இலங்கி விட்டதால்( செல்வம் மிகுந்து விட்டதால்) அதற்கு மூலக் காரணமான அப்பனாகிய இறைவனை மறக்கலாமோ? (கூடாது)
ஆதலால் செய்ய வேண்டியது என்னவெனில்
வெற்பெடுத்து மாரி காத்த வேலை வண்ணன் பணிமினே- கோவர்த்தனம் என்னும் மலையை எடுத்து மாரியினின்று ஆய்ப்பாடி மக்களைக் காத்த கடல்நிறக் கண்ணனைப் பணிமின்காள்!
இது சந்தக் கலிவிருத்தம்
Even though the books of wisdom tell us not to self glorify, we still glorify and promote the self finding no other commodity to sell! Like a layman who stumbles upon sudden wealth forgets his father or God, we do this, so the advice to ourselves is, not to do this and instead submit ourselves to the Lord who lifted Govardhana hill and protected his clan from the incessant rains!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக